Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்படுவார் - விஷாலுக்கு சரத்குமார் எச்சரிக்கை!

நடிகர் சங்கத்தை பற்றி  நடிகர் விஷால் தொடர்ந்து அவதூறு செய்திகளை பரப்பினால், நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்படுவார் என்று சங்கத்தின் தலைவர் சரத்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சி சட்டமன்ற தொகுதி செயலாளர்கள் பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்காக இன்று திருச்சி வந்த அக்கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான நடிகர் சரத்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "ஸ்ரீரங்கம் தொகுதியில் அ.தி.மு.க எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்.

இதில் பல அரசியல் சினிமா சார்ந்த நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சரத்குமார் கடைசியாக விஷால் குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசினார். "விஷால் தொடர்ந்து ஏன் நடிகர் சங்கத்தை பற்றி விமர்சித்து பேசி வருகிறார்கள் என தெரியவில்லை. இதுவரை விஷாலுக்கு எந்த பதிலும் கூறவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் விஷாலுக்கு நான் முறையாக பதில் சொல்ல விரும்புகிறேன்.

நடிகர் சங்கத்திற்கு 5 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் இருந்தது.  நடிகர்கள் சிலர் தங்கள் சொந்த பணத்தை போட்டு பல நிகழ்ச்சிகள் நடத்தி அந்த கடன் அடைக்கப்பட்டிருக்கிறது. இப்போது நடிகர் சங்கத்துக்கு 3 அரை கோடி ரூபாய் வைப்பு நிதியும் வைக்கப்பட்டுள்ளது. சத்யம் சினிமாசுடன் ஒப்பந்தம் செய்து கட்டடம் கட்டி 29 ஆண்டுகளுக்கு லீசுக்கு விடப்பட்டுள்ளது.

                                

இதற்கான முடிவை செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவுகள் எடுக்கப்பட்டது. நாங்கள் என்ன  வேலை செய்கிறோம் என தெரியாமல், இதற்கு முன்னால் சங்க செயல்பாடுகள் எப்படி இருந்தது, இப்போ எப்படி இயங்குகிறது என எதுவும் தெரியாமலேயே வெளியில் இருந்தபடி தேவையில்லாமல் தொடர்ந்து விஷால் ஏன் அவதூறு செய்திகளை பரப்புகிறார் என தெரியவில்லை. இது நல்லது இல்லை. இதுபோன்று தொடர்ந்து விஷால் அவதூறு செய்திகளை பரப்பினால், அவர் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்படுவார். நான் விஷாலை கடுமையாக எச்சரிக்கிறேன்" என்றார் காட்டமாக.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்