Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விரைவில் காக்கிச்சட்டை இசை!

’எதிர் நீச்சல்’ படத்திற்குப் பிறகு மீண்டும் தனுஷ் சிவகார்த்திகேயன், அனிருத் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘காக்கி சட்டை’ . தனுஷ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தை இயக்கி வருகிறார் துரை செந்தில்குமார்.

இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்து வருகிறார். இப்படத்தின் இசை நவம்பர் 20ம் தேதியான இன்று வெளியாகும் என சொல்லப்பட்டது.

எனினும், இன்னும் சில தொழில்நுட்பப் பணிகள் மீதி இருப்பதால் படத்தின் இசை வெளியீடு டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அனிருத்தும் அமெரிக்காவிற்கு விடுமுறையில் சென்றுவிட்டு இப்போதுதான் திரும்பியுள்ளதால் இனி பாடல் ட்ராக்குகளில் உள்ள மீதி வேலைகளை முடிப்பார் எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

படத்தின் இசை உரிமையை DIVO பெற்றுள்ளது. படம் ஜனவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

MUST READ

எடிட்டர் சாய்ஸ்