Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோவா திரைப்பட விழா: கவனத்தை ஈர்த்த 'குற்றம் கடிதல்'!

ற்போது கோவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ’இந்தியன் பனோரமா’ நடத்தும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள தேர்வாகி இருக்கும் 26 படங்களில், ஒரே தமிழ்த் திரைப்படமாக தேர்வாகியிருக்கிறது ‘குற்றம் கடிதல்’ என்னும் தமிழ்த் திரைப்படம். ஜே.எஸ்.கே நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் பிரம்மா இயக்கியுள்ளார்.

டிசம்பர் மாதம் திரையில் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படும் ’குற்றம் கடிதல்’ தற்போது திரைக்கு வரும் முன்பே சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட நிலையில், படம் குறித்து இயக்குநர் பிரம்மாவிடம் பேசினோம்.

’’படத்தில் நடித்திருப்பவர்கள் எல்லோருமே புதுமுகங்கள் தான்.இந்த படம் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கிற மாதிரி இருக்கும்.’’என உற்சாகமாய் பேச ஆரம்பிக்கிறார் பிரம்மா.

’’டீம் வொர்க் தான் எங்க படத்தோட பலம்னு சொல்லலாம். மாஸ்டர் அஜய், சாய் ராஜ்குமார், பாவல் நவகீதன்’னு படத்துல நடிச்சிருக்குறவங்க எல்லாருமே அவங்க பங்களிப்பை ரொம்பவே சிறப்பா செஞ்சிருக்காங்க. வெவ்வேறு தளத்தில் இருந்து வரும் கதாப்பாத்திரங்கள் சந்திக்கும்போது, அவர்கள் சந்தித்த அடுத்த ஒருநாள் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் ஒருவரி கதை.

இந்த படம் ’ஏ’ கிளாஸ் ஆடியன்ஸை மட்டுமல்லாமல் ஏ,பி,சி என எல்லாவகை ஆடியன்ஸ்களும் ரசிக்கும் வகையில் இருக்கும்.கண்டிப்பா இந்த படம் கமர்சியல் படமாவும் அதே நேரத்துல ஒரு நல்ல படமாவும் இருக்கும்னு நம்புறேன்.நான் விருதை எதிர்பார்த்து படம் எடுக்கலை. ஆனா நாம் எடுக்கிற படம் நல்ல படமா இருக்கணும்னு ஒவ்வொரு இயக்குநரும் நினைச்சா போதும்.

நேத்து படம் திரையிட்ட பிறகு நிறைய பேருகிட்ட இருந்து பாஸிடிவ் கமாண்ட்ஸ் வந்துட்டு இருக்கு.தமிழ் நாட்டுல ரிலீஸ் ஆகும் போது மக்கள்கிட்ட நல்ல வரவேற்பு இருக்கும்னு எதிர்ப்பாக்குறோம்.இதுக்கு முன்னாடி நான் நிறைய மேடை நாடகங்கள் இயக்கியிருக்கேன்.முதல் முறையா படம் எடுக்குறதும் ஒரு புது மாதிரியான நல்ல அனுபவத்தை கொடுத்திருக்கு’’ என்கிறார் அதே பெருமிதத்துடன்!

-பொன்.விமலா-

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close