Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டிசம்பர் 24ல் 'வாலு' ரிலீஸ்!

இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு சிம்புவின் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த வருடம் டிசம்பர் 24ல் 'வாலு' படம் ரிலீஸ் ஆகிறது என்று சிம்பு ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். 

2012 தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 13ல் சிம்பு நடித்த 'போடா போடி' படம் ரிலீஸ் ஆனது. அதற்குப் பிறகு சிம்பு ஹீரோவாக நடித்த எந்தப் படமும் ரிலீஸ் ஆகவில்லை. சிம்பு கௌரவத் தோற்றத்தில் நடித்த 'கண்ணா லட்டு தின்ன ஆசையா', 'இங்க என்ன சொல்லுது' படங்கள் மட்டும் வெளிவந்தன. 

'வேட்டை மன்னன்' , 'வாலு', 'இது நம்ம ஆளு', கௌதம் மேனன் இயக்கும் படம் என நான்கு படங்கள் சிம்புவின் வசம் உள்ளன. இதில் 'வாலு' படம் முதலில் ரிலீஸ் ஆக உள்ளது. அதற்கான டப்பிங் பணியில் சிம்பு தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

அறிமுக இயக்குநர் விஜய் சந்தர் 'வாலு' படத்தை இயக்குகிறார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். சந்தானம், விடிவி கணேஷ், பிரம்மானந்தம், 'ஆடுகளம்' நரேன், மந்த்ரா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

'' 'வாலு' படம் டிசம்பர் 24ல் ரிலீஸ் ஆகிறது. இதை ட்விட்டரில் டிரெண்டாக்கிய ரசிகர்களுக்கு நன்றி. கண் கலங்க வெச்சிட்டீங்க '' என்று சிம்பு ட்விட்டரில் ட்விட் செய்துள்ளார்.

 

 

 

 

 

எடிட்டர் சாய்ஸ்

[X] Close