Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரசியலுக்கு வருவீர்களா? - ரஜினி திட்டவட்டமான பதில்!

கோவாவில் நடைபெறும் 45-வது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டார் ரஜினிகாந்த். அப்போது அரசியலுக்கு வருவீர்களா? என்ற கேள்வியை கேட்க , அதற்கு அரசியலில் ஒரு போதும் ஈடுபடமாட்டேன் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

பல்வேறு கட்சிகள் ரஜினியை தங்கள் கட்சியில் சேருமாறு அழைப்பு விடுத்தபோதும், அந்த அழைப்புகளை ஏற்காமல் இருந்துவந்தார் ரஜினி. எனினும் அரசியல் குறித்த கேள்விக்கு திட்டவட்ட பதிலேதும் தெரிவிக்காமல் இருந்தார்.

     

இப்போது இந்த பதில் மூலம் அரசியல் பிரவேசம் பற்றிய கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதற்கு முன்பு ’லிங்கா’ பட விழாவில் பேசிய ரஜினி, அரசியல் மிகவும் ஆபத்தானது, அதே சமயம் ஆழமானதும் என கூறியிருந்தார்.

கோவா திரைப்பட விழாவில் ரஜினிக்கு, “இந்த ஆண்டின் சிறந்த திரையுலக பிரபலம்” என்ற விருதினை மத்திய அரசு ரஜினிக்கு வழங்கி கவுரவித்துள்ளது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close