Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கானா பாடகராக மாறிய மா.கா.பா.ஆனந்த்!

இயக்குநர் சுராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விஜய பாஸ்கர், ‘அட்டி’ என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

மா.கா.பா.ஆனந்த் , அஷ்மிதா ஹீரோ ஹீரோயினாக நடிக்கும் இப்படத்திற்கு இசை சுந்தர் சி.பாபு. இப்படத்தில் மா.கா.பா கானா பாடகராக நடிக்கிறாராம். 

இப்படம் குறித்து இயக்குநர் விஜய பாஸ்கர் கூறும்போது, முற்றிலும் நகைச்சுவையை மையமாக கொண்டு அனைத்து தரப்பினர்களையும் கவரும் விதமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

 சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் இளைஞர்களின் வாழ்வியல் எதார்த்ததை மிகவும் சுவாரஸ்யமாக கூறும் வகையில் ஜனரஞ்சகமாக எடுத்திருக்கிறோம். இதில் மா.கா.பா.ஆனந்த் கானா பாடகராக நடிக்கிறார்.

தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பை நெருங்கியுள்ள ‘அட்டி’ படத்தின் முக்கிய சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் பவர் பாண்டியன் உருவாக்கி வருகிறார் என கூறியுள்ளார். 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close