Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விக்ரம் படத்தில் நரேன் காத்திகேயன்?

‘ஐ’ படத்திற்குப் பிறகு விக்ரம் நடித்து வரும் படம் ‘பத்து எண்றதுக்குள்ள’. இதில் விக்ரமிற்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மேலும் பசுபதி மற்றும் இந்தி நடிகர் ஜாக்கி ஷரப் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ்தயாரித்து வருகிறார். விஜய் மில்டன் இயக்கி வரும் இப்படத்திற்கு இசை இமான். 

சமீபத்தில் நேபாளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். அடுத்த கட்ட படப்பிடிப்பு நவம்பர் 23ம் தேதி கோயம்புத்தூரில் தொடங்கவுள்ளது. இப்படத்தில் முக்கிய காட்சியாக அதிவேக கார் சேசிங் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாம்.

இதற்காக ’விஸ்வரூபம்’ படத்திற்கு ஸ்டண்ட் அமைத்த லீ வைட்டேகர், அதி நவீன கார்களை பயன்படுத்துவது பற்றி இந்தியாவின்  எஃப் 1 கார் பந்தய வீரரான நரைன் கார்த்திகேயனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலும் நரைன் கார்த்திகேயனும் இப்படத்தில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைக்காட்டிலும் முக்கியமாக இந்த ஃபார்முலா கார்களில் அஜித்தும் கலந்து கொண்டத் குறிப்பிடத்தக்கது. அஜித்தான் நரேன் கார்த்திகேயன் நம்பரை கொடுத்ததாகவும் குறியுள்ளார் விஜய் மில்டன். 

இதுகுறித்து ஸ்டண்ட் கலைஞர் லீ வைட்டேகரும் தனது ட்விட்டர் தளத்தில் ஹேங்கிங் வித் நரேன் கார்த்திகேயன் டிஸ்கஸ்ஸிங் ஃபார் ஆக்‌ஷன் ‘பத்து எண்றதுகுள்ள’ என ஒரு செல்ஃபி புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்