Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உண்மை என்று தெரிந்தபின்னரும் ஏன் அதே கேள்வி? - அனுஷ்கா ஷர்மா - கோலி அதிரடி பதில்!

சமீபகாலமாக விராட் கோலியும் அனுஷ்கா ஷர்மாவும் பல பொது இடங்களில் ஒன்றாகவே சுற்றினர் மேலும் சமீபத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரின்போது சாதனை படைத்த கோலி தனது மகிழ்ச்சியை அனுஷ்காவிற்கு பறக்கும் முத்தம் கொடுத்து பகிர்ந்து கொண்டார்.

இந்த வீடியோ முதல் புகைப்படங்கள் வரை நெட்டில் வைரலானது. இதன் பிறகு இவர்கள் குறித்த கிசுகிசுக்கள் இன்னும் வலுவாகின.

இதற்கு தற்போது அனுஷ்கா ஷர்மா மற்றும் கோலி இருவரும் தங்களது பதிலை பதிவு செய்துள்ளனர்.

“நாங்கள் எதையும் மறைக்கவில்லை. எதையும் மறைக்கவும் முயற்சிக்கவில்லை. எதையும் மறைப்பதற்கும் நாங்கள் விரும்பவில்லை.

இந்த விஷயத்தை நீங்கள் மீண்டும் மீண்டும் கேட்கும் போதும், இதை விவாதபொருளாக ஆக்கும் போதும், நாங்கள் இருவருமே இதை சரியானது என்று நினைக்கவில்லை. இருவரும் எங்காவது ஒன்றாக தோன்றினால் இன்னும் மக்கள் இது உண்மைதானா? என்று கேள்வி கேட்கின்றனர்.

நீங்கள் இதை அறிந்த பொழுது ஏன் ஒரே கேள்வியை கேட்கிறீர்கள். இது மிகவும் தனிப்பட்ட விஷயம் என்பதால் இதை பற்றி தனிப்பட்ட முறையில் பேச நாங்கள் விரும்ப வில்லை” என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close