Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஸ்ரீதிவ்யா மீது புகார் ? - ஸ்ரீதிவ்யா விளக்கம்!

’ஜீவா’ படத்தை அடுத்து ஸ்ரீதிவ்யா  ‘வெள்ளக்கார துரை’, ‘பென்சில்’,  ‘காக்கிச் சட்டை’ ,  ‘ஈட்டி’ உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். 

ஶ்ரீதிவ்யா இரண்டு வருடங்களுக்கு முன்பு ’காட்டுமல்லி’, மற்றும் ’நகர்புறம்’ ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.தற்போது அந்தப் படங்களில் ஸ்ரீதிவ்யா நடிக்க மறுப்பதாக அவர் மீது தயாரிப்பாளர்கள் புகார் கொடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஸ்ரீதிவ்யா தற்போது விளக்கம் அளித்துள்ளார். 

'' நான் எல்லா படங்களுக்கும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்து வருகிறேன். என் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை.

’காட்டுமல்லி’ படத்தில் நடிக்க இரண்டு வருடங்களுக்கு முன் ஒப்பந்தம் செய்யப்பட்டேன். ஆனால் அதன் படப்பிடிப்பு திடீரென நின்று போனது.

படப்பிடிப்புக் குழுவினரிடையே நடந்த குழப்பங்களால் படவேலைகள் தொடர்ந்து நடக்கவில்லை. அதன்பிறகு தயாரிப்பாளர்களிடம் இருந்து எந்தத் தகவலும் எனக்கு வரவில்லை.

பிறகு வேறு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து நடிக்கப் போய்விட்டேன். ‘காட்டுமல்லி’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் நடக்குமா என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை '' என கூறியுள்ளார் ஸ்ரீதிவ்யா. 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close