Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க! ஆர்யா - ராஜேஷ் படத்தின் டைட்டில்!

ஆர்யாவின் 'தி ஷோ பியூப்புள்'  நிறுவனத்தின் ராஜேஷ் இயக்கும் படம் 'வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க'. இதில் ஆர்யா, சந்தானம் நடிக்கின்றனர். ஆர்யாவுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.
 
இயக்குநர் ராஜேஷின் படங்களில் மையமாக விளங்கும் சந்தானம் இந்தப் படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடிக்க உள்ளார். முக்தா பானு, வெண்ணிற ஆடை முர்த்தி,  ரேணுகா, கருணாகரன், சித்தார்த் விபின், வித்யூ லேகா மற்றும் பலர் நடிக்க உள்ளனர்.
 
 
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜாக்கி  கலை வண்ணத்தில், இமான் இசை அமைக்க உள்ள இந்தப் படம் சமீபத்தில் பூஜையுடன் துவங்கியது.

'' ஆர்யா- சந்தானம்- மற்றும் என்னுடைய கூட்டணியில் வெளிவந்த எங்களது முந்தைய படமான 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தின் வெற்றியையும் தரத்தையும் இந்தப் படத்திலும் தருவோம்'' என்று நம்பிக்கையோடு கூறியுள்ளார் இயக்குநர் ராஜேஷ். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close