Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜய் 58 படத்தில் ஹாலிவுட் சண்டைப் பயிற்சியாளர்கள்!

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப், தம்பி ராமையா, விஜயகுமார், ரோபோ ஷங்கர், சத்யன் ஆகியோர் நடித்து வரும் படம் ‘விஜய் 58’. 

அரச வம்ச கதை, ஃபேன்டஸி என விஜய்க்கு முற்றிலும் புதிதான கதை மற்றும் கதாபாத்திரமாக இருக்கும் ‘விஜய் 58’ படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சண்டைக் காட்சிகளும் இருக்கின்றன.

இதற்காக சீனாவின் சாங் லின், தாய்லாந்து நாட்டின் ப்ரடிட் சீலம், மற்றும் மும்பையைச் சேர்ந்த சுனில் ரோட்ரிகஸ் உள்ளிட்டோர் ’விஜய்58’ படத்தின் சண்டைப் பயிற்சியாளர் திலீப் சுப்புராயனுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

'' படத்தில் சண்டைக்காட்சிகள் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இருக்கும் '' என திலீப் சுப்புராயன் தெரிவித்துள்ளார்.

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்