Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய் சேதுபதி இளையராஜா கூட்டணியில் மேற்கு தொடர்ச்சி மலை!

பிப்ரவரியில் வெளியான ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்திற்குப் பிறகு தற்போதுதான் விஜய் சேதுபதி நடிப்பில் ‘வன்மம்’ வெளியாகி உள்ளது. இடையில் வெளியான ‘ஜிகர்தண்டா’, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ மற்றும் ‘திருடன் போலீஸ்’ என படங்கள் வெளியானாலும் அவையாவும் சிறப்புத் தோற்றமே. 

’பண்ணையாரும் பத்மினியும்’ படத்திற்குப் பிறகு எட்டு மாதங்கள் கழித்து வெளியாகியுள்ள படம் ‘வன்மம்’. இந்தப் படத்தை  அடுத்து ‘ஆரஞ்சு மிட்டாய்’ படம் ரிலீஸூக்கு ரெடியாகி வரும் நிலையில் . மீண்டும் சொந்த தயாரிப்பில் இரண்டாவது படத்தைத் துவக்க உள்ளார் விஜய் சேதுபதி.

ஏற்கனவே ‘ஆரஞ்சு மிட்டாய்’ படம் விஜய் சேதுபதியின் சொந்தத் தயாரிப்பில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவரின் அடுத்த படத்திற்கு ’மேற்கு தொடர்ச்சி மலை’ என பெயரிடப்பட்டுள்ளது. படத்தை லெனின் பாரதி இயக்குகிறார் . இவர் சுசீந்திரனிடம் துணை இயக்குநராகப் பணியாற்றியவர். இப்படத்தின் கதை பிடித்து விடவே படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார் இளையராஜா. 

இப்படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த மாதம் இறுதியில் துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close