Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சூர்யா படத்தில் மூன்று நாயகிகள்!

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் மாஸ். நயன்தாரா , எமி ஜாக்சன் நாயகிகளாக நடிக்கும் இப்படத்திற்கு  யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

வெங்கட்பிரபுவும், மதன் கார்க்கியும் இணைந்து திரைக்கதை எழுதுகிறார்கள். ஆர்.டி.ராஜசேகர் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

ஜெயராம், பார்த்திபன், சமுத்திரக்கனி, வித்யூ லேகா, ரியாஸ்கான், கருணாஸ், பிரேம் ஜி அமரன்  ஆகியோர் நடிக்கும் இப்படத்தில் புதிதாக இணைந்திருப்பவர் ப்ரணிதா. இவர் ஏற்கனவே கார்த்தியின் ‘சகுனி’ படத்தில் நாயகியாக நடித்தவர்.

தற்போது ‘மாஸ்’ படத்தில் ஒரு முக்கியமான  கதாபாத்திரத்தில் ப்ரணிதா நடிக்க உள்ளார். ஆவியை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படம்  பிரம்மாண்டமாக எடுக்கப்படுகிறது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்