Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அனேகன் படத்தின் கதை!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ், அமைரா தஸ்தூர் நடிக்கும் படம் 'அனேகன்'. ஜெகன், அதுல் குல்கர்னி, கார்த்திக், தலைவாசல் விஜய், ஆசிஷ் வித்யார்த்தி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

நவம்பர் 9ம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. 'டங்காமாரி ஊதாரி' பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட்டடித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், 'அனேகன்' படத்தின்  கதை கொஞ்சம் கசிய ஆரம்பித்திருக்கிறது. தனுஷூம், அமைரா தஸ்தூரும் காதலிக்கின்றனர். இந்தக் காதல் ஒரு தலைமுறையோடு முடிந்துபோய்விடவில்லை. நான்கு தலைமுறையாகத் தொடர்கிறது.

நான்கு தலைமுறையிலும் தனுஷூம், அமைரா தஸ்தூரும் காதலிக்கின்றனர். அந்த அளவுக்கு தீராக் காதலை கே.வி. ஆனந்த் 'அனேகன்'  மூலம் சொல்லியிருக்கிறாராம்.

இதில் தனுஷ், அமைரா தஸ்தூர் இருவருக்குமே நான்கு கெட்டப்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்