Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விக்ரமுக்கு வில்லன் ஆன விஜய் பட வில்லன்!

’வேலாயுதம்’, ‘தலைவா’ படங்களில் வில்லனாக நடித்தவர் பாலிவுட் நடிகர் அபிமன்யு சிங். தமிழில் ‘வேலாயுதம்’, ‘தலைவா’ மற்றும் ‘கூட்டம்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது விக்ரம் நடிக்கும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் நடிக்கிறார். இதுகுறித்து சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். 

'' ‘வேலாயுதம்’ படம் மூலம் தமிழ்ப் பட வாய்ப்பு கிடைத்தது. தமிழில் நான் விக்ரம் நடிப்புக்கு ரசிகன். அவரை சந்திக்காத வரை அவரை மிகவும் முரட்டுத்தனமானவர் என நினைத்தேன்.

ஆனால்,  நேரில் சந்தித்த பிறகு விக்ரம் சிறந்த மனிதர் என்பதைப் புரிந்து கொண்டேன் . 

விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘பத்து எண்றதுக்குள்ள' படத்தில் எனது பங்கும் இருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்'' என தெரிவித்துள்ளார்.

'பத்து எண்றதுக்குள்ள' படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close