Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இளையராஜா என் கடவுள் - தனுஷ் !

இளையராஜா என் கடவுள்! என்று ட்விட்டரில் தனுஷ் ட்வீட் செய்துள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் தனுஷ் வரிகளில் சமீபத்தில் ‘ வை ராஜா வை’ படத்தில் இளையராஜா ஒரு பாடல் பாடியிருக்கிறார்.  அந்த பாடலுக்குப் பிறகு இளையராஜா மீது இன்னும் மதிப்பு கூடிவிட்டதாக சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கூட பகிர்ந்து கொண்டார் தனுஷ். 

தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ' என் கடவுள்! என் தலைவன்! என் இசைஞானி! என் இசை!என் உத்வேகம்! என் ஆன்மா! என் இதயத்துடிப்பு! என் இளையராஜா!!'  என குறிப்பிட்டுள்ளார் தனுஷ்.

மேலும், இளையராஜாவின் ஒரு புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close