Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'லிங்கா' பார்க்க ஆவலாக இருக்கிறேன் - அனுஷ்கா பதில்!

'' நான் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜோடிசேரும் அளவுக்கு சினிமாவில் உயர்ந்துவிட்டேன். 'லிங்கா' படம் பார்க்க ஆவலாக இருக்கிறேன்'' என்று கூறியுள்ளார் அனுஷ்கா.

‘லிங்கா’, ‘என்னை அறிந்தால்’, , 'பாகுபலி', ‘ருத்ரம்மாதேவி’ என பல படங்களில் அனுஷ்கா நடித்து வருகிறார். அனுஷ்கா ரஜினியுடன் நடித்த 'லிங்கா' படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. படம் ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ல் வெளியாகிறது.

 இந்நிலையில் அனுஷ்கா மனம் திறந்து பேசியுள்ளார்.

'' சினிமாவில் நான் சிறந்த டான்ஸர் கிடையாது. பிரமாதமான நடிகையும் இல்லை. ஆனாலும் கேமரா முன்னால் போய் விட்டால் நூறு சதவீத உழைப்பைக் கொடுக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் கடுமையாக உழைக்கிறேன்.

ஒவ்வொருவரிடமும் நிறைய கற்றுக் கொள்கிறேன். லைட்பாயிடம் இருந்து கற்றுக் கொள்வதில் கூட தயக்கம் காட்டுவது கிடையாது. இதனால்தான் நிறைய விஷயங்களைத்  தெரிந்து கொண்டு இருக்கிறேன்.

ரஜினியுடன் நடித்த ‘லிங்கா’ படம் அடுத்த மாதம் டிசம்பர் 12–ந்தேதி ரிலீஸாக இருக்கிறது. அந்தப் படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். '' என்று அனுஷ்கா கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close