Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கல்விப் பிரச்னையைச் சொல்லும் ‘சிகண்டி’ ?

இயக்குநர் ராஜபாண்டி இயக்கத்தில் விஜய் வசந்த், நிகிஷா படேல் நடிக்கும் படம் ‘சிகண்டி’. இந்தப் படம் பள்ளிக் கல்வி குறித்த சமூகப் பிரச்னையை எடுத்துரைக்குமாம். 

படம் கூறித்து ராஜபாண்டி கூறியதாவது: பள்ளிக் கல்வி சம்பந்தமாக சில படங்கள் ஏற்கனவே வந்திருக்கின்றன. மேலும் வரலாம். ஆனால், அவர்கள் இதுவரை சொல்லாத, சொல்லப்படாத விஷயங்கள் இந்தப் படத்தில் நிறைய இருக்கின்றன.

அந்த விஷயங்களை முழுமையாகத் தருவதற்காக கிட்டத்தட்ட ஆறு மாதகாலம் சம்பந்தப்பட்ட கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகை நண்பர்களுடன் ஆலோசித்து பல நல்ல தகவல்களைத் திரட்டி உள்ளோம். அதைத் திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறோம்.

ஒரு இயக்குநராக என் பார்வையில் கல்வியின் தரம், குறிப்பாக பள்ளிக் கல்வியின் தரம் இப்படியெல்லாம் இருக்கலாமே என்கிற ஆதங்கம் இந்த ’சிகண்டி’ படத்தில் வெளிப்படும். படம் பார்க்கிற ஒவ்வொருவரும் படத்தில் ஏதோ ஒரு சம்பவத்தில் தன்னைத் தொடர்புபடுத்திப் பார்க்க முடியும். படப்பிடிப்பு விரைவில் துவங்கி படம் மே மாதம் வெளியாகும்.

'என்னமோ நடக்குது' படத்தைப் போலவே  'சிகண்டி' படத்தையும் அதிக பொருட்செலவில் டிரிபிள் வி ரெக்கார்ட்ஸ் பட நிறுவனம் சார்பாக வி.வினோத்குமார் தயாரிக்கிறார். 

நாசர், சரண்யா, மனோஜ்.கே.பாரதி நடிக்கிறார்கள். கௌரவ வேடத்தில் நடிக்க சூரியிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். 

அழுத்தமான,  வேறுபட்ட கதாபாத்திரம் ஒன்றில் சமுத்திரக்கனியை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடக்கிறது'' என்கிறார் ராஜபாண்டி.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close