Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

படம் பண்றதுன்னா அம்புட்டு ஈஸியா?

வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார் என்பதோடு படத்தை ரிலீஸ் பண்ணிப்பார் என்பதையும் சேர்த்துக்கலாம். குறிப்பாகப் பெரிய நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்களுக்கு பண்ற விளம்பர வேலைகள் மலைக்க வெச்சிடும்.

பட பூஜையே சென்டிமென்டான பிள்ளையார் கோவிலிலோ முருகன் கோவிலிலோ தான் தொடங்கும். அங்க தொடங்கின படமெல்லாம் சூப்பர் ஹிட்டுனு சொல்லி அப்பவே விளம்பரத்தையும் தொடங்கிடுவாங்க!
 
 
அடுத்து ஷூட்டிங் போனதும் ஸ்பாட்ல, அபாயகரமான காட்டுல நடந்தப்போ ஹீரோயின் காலில் முள்ளு குத்தி ரத்தம் கொட்டுச்சுணும் ஹீரோதான் துணிச்சலா அந்த முள்ளைப் பிடுங்கி ஹீரோயினைக் காப்பாத்தினார்னும் ஒரு செய்தியை கசிய விடுவாங்க!
 
அடுத்ததா சண்டைக் காட்சியில், தலைகீழாக் குதிக்கிற சீனை டூப் போடாமலே பண்றப்போ, ஜஸ்ட் ஸ்லிப் ஆகி ஹீரோவோட தோள்பட்டையில் பலத்த காயமடைந்ததாகவும் மறுநாளே ஷூட்டிங் பாதிக்கக் கூடாதுனு வந்து  கலந்துகிட்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினதா பத்திரிகைகளுக்கு செய்தியைக் கசிய விடுவாங்க!
 
 
கதை வெளியில தெரிய ஆரம்பிச்சுட்டா புதுசா ஒரு பிரச்னை கிளம்பணுமே. அந்தக் கதை தன்னோட கதைனு சொல்லிட்டு ஒருத்தர் வருவார்!
 
ட்ரெய்லர் வெளியான மறுநாளே ஒரு வக்கீலோ, மாதர் சங்கமோ அந்தப் படம் தங்களை இழிவுபடுத்துவதாகச் சொல்லி, சொல்லி வெச்ச மாதிரி கோர்ட்டுக்குப் போவாங்க. படத்தோட ரிலீஸ் பற்றிய பரபரப்பு தொத்திக்கும்!
 
அந்தப் படத்தோட பாட்டை கேட்டுட்டு ஜாக்கிசானும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் மெய்சிலிர்த்து ட்வீட் பண்ணினதா பரபரப்பு காட்டுவாங்க. அதிலும் குறிப்பா அந்தப் படத்தோட ஹீரோவே சொந்தக் குரலில் பாடின பாட்டைக் கேட்டுட்டு ஒபாமாவே விருந்துக்குக் கூப்பிட்டதா, முன்னணிப் பாடகர்கள் அம்புட்டு பேரையும் மூக்குல விரல வைக்கச் செய்வாங்க! இதெல்லாம் ஒபாமாவுக்குத் தெரியுமா?
 
 
இடைப்பட்ட நாளில் ஹீரோவுக்குப் பிறந்தநாளும் வரும். அதில் நலத்திட்ட உதவிகள் வழங்குவார். சைக்கிள் கேப்புல நான் அரசியலுக்கு வருவேன், இப்போ இல்லைனாலும் இன்னொரு நாள் கண்டிப்பா வருவேன்னு ஹீரோ  அறிக்கையோ பேட்டியோ கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். மற்றவர்களை குழப்பி விடுவார்!
 
படத்தோட ரிலீஸ் வரைக்கும் வெவ்வேறு விதமான போராட்டம், சமாதான பேச்சுவார்த்தை, கோர்ட்டு கேஸ்னு நடத்திட்டு, ரிலீஸ் ஆகிறப்போ காலையில எல்லா பிரச்சனைகளையும் சுபம் ஆகிடும்!
 
படம் ரிலீஸ் ஆன மறுநாளே பிரமாண்டமான வெற்றி விழா கொண்டாடுவாங்க. சேனல்கள், பத்திரிக்கைகள், ரேடியோக்கள்னு எதைத் திருப்பினாலும் படத்தைப் பற்றிய சிறப்பு நிகழ்ச்சிகள்தான்!

 இப்போ சொல்லுங்க, படம் பண்றதுனா அம்புட்டு ஈஸியா பாஸ்?

- வத்திராயிருப்பு தெ.சு. கவுதமன்

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

[X] Close