Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீண்டும் இணையும் லிங்குசாமி - விஷால்!

'சண்டக்கோழி' படத்துக்குப் பிறகு லிங்குசாமி இயக்கும் படத்தில் விஷால் நடிக்கிறார்.

2005ல் லிங்குசாமி இயக்கிய படம் 'சண்டக்கோழி'. விஷால், மீரா ஜாஸ்மின், கஞ்சா கருப்பு, ராஜ்கிரண் நடித்த இப்படம் விஷாலை கமர்ஷியல் ஹீரோவாக அடையாளம் காட்டியது. அதற்குப் பிறகு விஷால் ஆக்‌ஷன் பக்கம் ஆர்வம் காட்டினார். தற்போது இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது.

லிங்குசாமி தற்போது கார்த்தியை வைத்துப் படம் இயக்க உள்ளார். ஜனவரியில் ஷூட்டிங் ஆரம்பம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, விஷாலை இயக்க உள்ளார் லிங்குசாமி. இது  'சண்டக்கோழி 2' படமாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையில், சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் விஷாலும், லட்சுமி மேனனும் இணைந்து நடிக்க உள்ளனர். சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், ஹன்சிகா நடிக்கும் 'ஆம்பள' படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close