Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரபுதேவாவின் திகில் பட ஆசை!

’ஆக்‌ஷன் ஜாக்சன்’ படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார் பிரபுதேவா. அஜய் தேவ்கன், சோனாக்‌ஷி சின்ஹா, யாமி கௌதம் நடித்திருக்கும் இப்படம் இம்மாதம் 5ம் தேதி வெளியாக உள்ளது. 

தமிழிலும் தங்கர் பச்சானின் ‘களவாடிய பொழுதுகள்’ படத்தின் ரிலீஸ் குறித்த தேதிகள் பேசப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் இவ்விரண்டு படங்களின் வெளியீட்டிற்கு பிறகு ஒரு நல்ல ஹாரர் படம் எடுக்கும் ஆசையில் இருக்கிறாராம் பிரபுதேவா.

இதுகுறித்து சமீபத்தில் ‘ஆக்‌ஷன் ஜாக்சன்’ சந்திப்பில் பிரபுதேவா பேசியதாவது:  '' இப்போதெல்லாம் பேய், மற்றும் திகில் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. 

நல்ல கதைக்காக காத்திருக்கிறேன். கதை அமையும் தருவாயில் ஒரு முழு நீள ஹாரர் படம் எடுக்க உள்ளதாக முடிவு செய்துள்ளேன் . நினைத்தபடி கதை அமைந்தால் தமிழில் எடுக்கும் எண்ணம் உள்ளது''  என கூறியுள்ளார் பிரபுதேவா. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்