Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெய், சுரபி நடிக்கும் ‘புகழ்’!

சராசரி இளைஞன் மற்றும் அப்பாவியான கதாபாத்திரங்களில் நடித்துவந்த ஜெய் இப்போது அதிரடி ஆக்ஷன் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

'வலியவன்' படத்தைத் தொடர்ந்து 'உதயம் NH4' இயக்குநர் மணிமாறன் இயக்கும் புதிய படத்தில் ஜெய் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்துக்கு ‘புகழ்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.  இதில் ஹீரோயினாக சுரபி நடிக்கிறார்.

  '' நம் வாழ்வில் நாம் எப்போதும் அறிந்தோ , அறியாமலோ ஜெயிக்க வாய்ப்பில்லை என கருதப்படுபவர், ஜெயிக்க வேண்டும் என ஆசைப்படுவதுண்டு. அவர்களின் வெற்றியில் நாம் நம்மைக் காண விழைவது உண்டு. 'புகழ்' நாம் வாழ்வில் நாம் சந்திக்கும் அத்தகைய ஒரு நபரைப் பற்றிய கதை '' என்கிறார்  தயாரிப்பாளர் சுஷாந்த்.

ஜெய் 'புகழ்' எனும் கேரக்டரில் நடிக்கிறார். 'புகழ்' படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கி உள்ளது.

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close