Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'சாஹசம்' படத்தில் பாடிய லட்சுமி மேனன்!

லட்சுமி மேனன் தற்போது ப்ளஸ் டூ படித்துக்கொண்டிருக்கிறார். நடிப்பு எந்த விதத்திலும் படிப்புக்கு தடையாக இருக்கக்கூடாது என்று சில படங்களில் மட்டுமே நடிக்கிறார்.

கார்த்தியுடன் 'கொம்பன்' படத்தில் நடித்துவரும் லட்சுமி மேனன், 'சாஹசம்' படத்துக்காக ஒரு பாடலைப் பாடி இருக்கிறார். தமன் இசையில், மதன் கார்க்கி வரிகளில் லட்சுமி மேனன் பாடிய பாடல் மிக நன்றாக வந்திருக்கிறதாம்.

தியாகராஜன் தயாரிப்பில் பிரசாந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை அருண் ராஜ் வர்மா எனும் புதுமுக இயக்குநர் இயக்குகிறார்.

லட்சுமி ஏற்கெனவே 'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படத்தின் இமான் இசையில் ஒரு பாடலைப் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close