Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தனுஷுடன் நடிக்கும் எமி ஜாக்சன்!

'வேலையில்லா பட்டதாரி' டீம் மீண்டும் இணைகிறது. இந்தப் புதிய படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இதில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார் எமி ஜாக்சன்.

தனுஷ் தமிழ், இந்திப் படங்களில் பிஸியாக நடித்துவருகிறார். 'அனேகன்', 'மாரி', 'ஷமிதாப்' படங்களில் நடிக்கும் தனுஷ் அடுத்து வேல்ராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

எமி ஜாக்சன் இதில் ஹீரோயினாக நடிக்கிறார். இதை தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது. பிப்ரவரியில் ஷூட்டிங் தொடங்க உள்ளது.

எமி ஜாக்சன் 'ஐ' படத்துக்குப் பிறகு உதயநிதி, தனுஷுடன் நடிக்க இருக்கிறார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்