Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'லிங்கா' வழக்கு தள்ளுபடி ஆனது!

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி, சோனாக்‌ஷி சின்ஹா, அனுஷ்கா, சந்தானம் நடிப்பில் டிசம்பர் 12ல் வெளியாக உள்ள படம் ‘லிங்கா’. 

இப்படத்தின் கதை என்னுடையது என சில நாட்களுக்கு முன்பு மதுரை சின்ன சொக்கிகுளத்தை சேர்ந்த கே.ஆர்.ரவிரத்தினம் வழக்கு தொடர்ந்தார். 

'' பெரியாறு அணையை கட்டிய பென்னிகுக் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு ‘முல்லைவனம் 999’ என்ற பெயரில் படமாக எடுக்கத் திட்டமிட்டேன் , இந்தப் படத்தின் கதையை 24.2.2013ல் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்தேன். யூ டியூப்பில் இருந்த எனது கதை ‘லிங்கா‘ என்ற பெயரில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது '' என  வழக்கு தொடர்ந்திருந்தார் ரவிரத்தினம். 

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி வேணுகோபால் “ மனுதாரர் குறிப்பிட்டுள்ள அறிவுசார்ந்த கதை திருட்டு புகார், இந்த நீதிமன்றம் விசாரணைக்கு உகந்தது அல்ல என அறிவிக்கிறது. இப்புகார் சிவில் சம்பந்தப்பட்டது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது '' என உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
[X] Close