Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யாமிருக்க பயமே படக்குழுவின் அடுத்த படம்!

கிருஷ்ணா ,ஓவியா, ரூபா மஞ்சரி , கருணாகரன் நடித்து வெளியான காமெடி திகில் படம் ‘யாமிருக்க பயமே’ . இப்படம் அனைவரிடமும் வரவேற்புகள் பெற்றன. இந்தப் படத்தை எல்ரெட் குமார் தயாரிப்பில் டீகே இயக்கினார். இப்போது மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது.

இதுகுறித்து எல்ரெட் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ”டீகேவின் அடுத்த கதை என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. ‘யாமிருக்க பயமே’  படக்குழுவிடமிருந்து முழுநீள காமேடி மற்றும், வித்தியாசமான கதைக்களம் விரைவில்” என ட்வீட் செய்துள்ளார். 

ஒருவேளை அதே நடிகர்கள் நடிப்பார்கள் எனில், ‘விழித்திரு’, ‘யட்சன்’ ,’யாக்கை’ படங்களுக்குப் பிறகு கிருஷ்ணா நடிக்கும் படமாக இந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்