Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

க்ளீன் த்ரிஷா!

பிரதமரின் 'தூய்மை இந்தியா' திட்டத்துக்கு சாதாரண மக்களிடம் வரவேற்பு இருக்கிறதோ இல்லையோ, நடிகர் நடிகைகள் போட்டி போட்டு இந்தியாவைத் தூய்மைபடுத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த லிஸ்டில் லேட்டஸ்ட்டாக இணைந்திருப்பவர் நடிகை த்ரிஷா!


 
பிரதமர் மோடியின் 'தூய்மை இந்தியா' திட்டத்துக்கு ஆதரவாக 'Environmentalist Foundation of India' அமைப்பு சென்னை முடிச்சூர் அருகே விரைவில் துவங்கவுள்ள விலங்குகள் மையத்தை தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டது. விலங்குகள் மீது அலாதி அன்புகொண்ட நடிகை த்ரிஷா இந்த அமைப்புடன் இணைந்து விலங்குகள் மையத்தைத் தூய்மைப்படுத்தினார்.
 
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட த்ரிஷா, 'பூமியில் விலங்குகளுக்கும் சரிபாதி உரிமை இருக்கிறது. விலங்குகளுக்காக சுத்தமான, சுகாதாரமான இடத்தை ஏற்படுத்தித்தர வேண்டியது மனிதர்களாகிய நம்முடைய பொறுப்பு'  என்று தெரிவித்தார். 2015 முதல் செயல்படவிருக்கும் இந்த மையம் ஆதரவற்ற, வயோதிக விலங்குகளுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது!
 
- கே.ஜி.மணிகண்டன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close