Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரே நேரத்தில் டிரெண்ட் ஆன தல,தளபதி!

இன்று அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு சிறப்பான நாள். வெகு நாட்களாக எதிர்பார்த்த ‘என்னை அறிந்தால்’ டீஸர் வெளியானது அஜித் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம். 

அதேவேளையில் இன்று விஜய் சினிமா துறைக்கு வந்து 22 வருடங்கள் ஆன நிலையில் அதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

                 

நேற்று இரவு 12 மணிக்கு #YennaiArindhaalTeaserStormOnDec4 முதல் இடத்தில் இருக்க #MufflerMan என கெஜ்ரிவால் இரண்டாம் இடத்தில் இருந்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் #VIJAY_22YearsOfGloriousJourney என்ற வார்த்தையும் இணையத்தில் களமிறங்கி கெஜ்ரிவாலை பின்னுக்குத் தள்ளி  தல , தளபது முதல் இரண்டு இடங்களைப் பிடித்துவிட்டனர்.  

’ஜில்லா’, ‘வீரம்’ இவ்விரு படங்களும் ஒரே நாளில் வெளியான போது இதே போல தல, தளபதி டிரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது. இப்போதும் அதேபோல் ரசிகர்கள் போட்டி போட ஆரம்பித்துள்ளனர். 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close