Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

என்னை அறிந்தால் டீஸர் குறித்து பிரபலங்களின் கருத்துகள்!

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா , த்ரிஷா நடித்து பொங்கல் சிறப்பாக வெளியாக உள்ள படம் ‘என்னை அறிந்தால்’. 

படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த படங்களில் இந்த படமும் ஒன்று. இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி இணையம் முழுவதும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. 

இந்நிலையில் டீஸரைப் பார்த்த திரை பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துகளை ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளனர். 

அதில் அஜித்தின் ரசிகரான சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில்.  ''க்ளாஸ் + மாஸ் , பாருங்கள்'' என கூறியுள்ளார். இதே போல் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ”சிம்ப்ளி மாஸ். ரிலீஸ் வரை காத்திருக்க முடியாது” என கூறியுள்ளார். 

அதே போல் ராய் லட்சுமி ”தல இரு கெட்டப்களில் பிரமாதமாக இருக்கிறார். ’மங்காத்தா’ படத்திற்குப் பிறகு அஜித் ’என்னை அறிந்தால்’ படத்தில் மீண்டும் அனைவரின் கண்களையும் கொள்ளை கொள்வார்” என தெரிவித்துள்ளார். 

இதே போல் விக்ரம் பிரபு. '' தனிப்பட்ட முறையில் நீண்ட நாட்களாக நான் காத்திருந்தது இதற்குத்தான். இட்ஸ் டைம் டு ராக் ‘என்னை அறிந்தால்’ டீஸர் '' என தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் அனிருத்,  ''மாஸ் & ராக்கிங்'' என டீஸர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.  

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்