Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கயல் ரிலீஸ் தேதி மாற்றம்?

பிரபுசாலமன் இயக்கத்தில் ஆனந்தி, சந்திரன் நடித்து வெளியாக உள்ள படம் ‘கயல்’. இமான் இசையில் ஏற்கனவே படத்தின் பாடல்கள் கவனம் ஈர்த்தன.

’மைனா’, ‘கும்கி’ என தொடர்ந்து இரு படங்களின் வெற்றியால், 'கயல்' இந்த படத்துக்கும் பலத்த எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. படத்தின் வெளியீடு டிசம்பர் 25 என முடிவு செய்யப்பட்டிருந்தது.

தற்போது இன்னும் ஓரிரு தினங்களில் படத்தை சென்சாருக்கு அனுப்பி வைக்க உள்ளனர். ஒருவேளை சென்சார் சான்றிதழ் விரைவில் கிடைக்கப்பெற்றால் படத்தை டிசம்பர் 19ம் தேதியே வெளியிடும் எண்ணத்தில் இருக்கிறார்களாம்.

டிசம்பர் 25ல் ‘மீகாமன்’ , ’இசை’ , 'எனக்குள் ஒருவன்', 'வெள்ளக்காரதுரை', 'கப்பல்'  ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.  டிசம்பர் 19ல் மிஷ்கினின் ‘பிசாசு’ படமும் வெளியாவது குறிப்பிடத்தக்கது. 

எடிட்டர் சாய்ஸ்

[X] Close