Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உதயநிதி - எமிஜாக்சன் படம் ஜனவரியில் ஷூட்டிங்!

திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி , எமி ஜாக்சன் நடிக்கும் புதிய படம் விரைவில் துவங்கப்பட உள்ளது. இந்த படத்திற்கு ‘கெத்து’ என தலைப்பு வைத்ததாக தகவல்கள் வெளியாகின. 

ஆனால், ’கெத்து’ என்ற டைட்டிலை ஒளிப்பதிவாளர் கோபிநாத் பதிவு செய்திருக்கிறார். ’தில்’ , ‘தூள்’ , ‘கில்லி’  ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் கோபிநாத். இவர் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்துக்கு 'கெத்து' என்று டைட்டில் வைத்திருக்கிறார்.

உதயநிதி படத்துக்கு முன்பே, கோபிநாத் 'கெத்து' என்று டைட்டில் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. இதனால், உதயநிதி தன் படத்துக்கு புது டைட்டில் வைக்க உள்ளாராம். 

‘நண்பேன்டா’ படத்துக்குப் பிறகு திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி நடிக்க உள்ளார்.  ஜனவரி 20ல் ஷூட்டிங் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close