Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அஜித் ரசிகராக நடிக்கும் ஆர்யா- யட்சன் சீக்ரெட்!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா, கிருஷ்ணா , சுவாதி, தீபா சன்னிதி நடிக்கும் படம் ‘யட்சன்’. படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா.

இந்த படத்தில் ஆர்யா அஜித்தின் ரசிகராக நடித்து வருகிறார். இதன் ஒருகட்டமாக அஜித்தின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் ஊற்றிய படப்பிடிப்பு காட்சி  யூடியூபில் பிரபலமாகி வருகிறது. 

இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இசை’ படத்தில் விஷ்ணுவர்தன் ஒரு காட்சியில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே ‘யட்சன்’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

படம் கோடைகால விடுமுறையில் ரிலீஸ் ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எடிட்டர் சாய்ஸ்

[X] Close