Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜய் சேதுபதியுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி!

தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் 'நானும் ரௌடிதான்'. விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். 

விக்னேஷ் சிவன் சிம்பு, வரலட்சுமி நடித்த 'போடா போடி' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

'நானும் ரௌடிதான்' படத்தின் ஷூட்டிங் பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கிறார். அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

 

'' 'நானும் ரொடிதான்' படத்தில் சூப்பர் ஃப்ரெண்ட்லி விஜய்சேதுபதியுடன் நடிக்கிறேன். என் நண்பன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பது மகிழ்ச்சி'' என்று ட்விட் செய்துள்ளார்.

இயக்குநர் விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் பெயரிடாப்படாத படத்திலும் ஆர்.ஜே பாலாஜி நடித்துக்கொண்டிருக்கிறார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்