Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினிக்காக நாட்களை எண்ணும் தனுஷ்!

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி, அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா, சந்தானம், கருணாகரன் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ள படம் ‘லிங்கா’. 

படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி வெளியாக உள்ள இப்படத்திற்காக ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல சினிமா பிரபலங்களும் காத்திருக்கின்றனர். 

இந்நிலையில் தனுஷுக்கு இப்படம் டபுள் சிறப்பு என்றே சொல்லலாம். ரஜினி தனுஷுக்கு மருமகன் அதே போல் படத்தின் தலைப்பு தனுஷ் மகனின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது. 

படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ’லிங்காவிற்கு இன்னும் 4 நாட்கள்தான் உள்ளது , 3 நாட்கள் தான் உள்ளது, என கவுண்டவுன் போடத்துவங்கியுள்ளார். 

''lingaa 4 more days to go... lingaa 3 more days to go'' என தனது ட்விட்டர் பக்கத்தில் தினமும் ஒரு ட்வீட் செய்ய மறப்பதில்லை தனுஷ். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close