Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

60 வயதில் டூயட் ஆட வைத்தது கடவுள் கொடுத்த தண்டனை- ரஜினி!

நேற்று ஹைதராபாத்தில் நடந்த ‘லிங்கா’  பட புரமோஷன் நிகழ்ச்சியில் ‘60 வயதுக்கு மேல் டூயட் பாட வைத்தது கடவுள் கொடுத்த தண்டனை’ என கூறியுள்ளார். 

விழாவில் ரஜினி பேசியதாவது: '' எனக்கும் இது சவாலான படம். சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

சோனாக்ஷி சின்ஹாவை சிறு வயதிலேயே தெரியும். என் மகள்களுடன் வளர்ந்தவர்.அவரோடு காதல் டூயட் பாட வேண்டும் என்றதும் வெட வெடத்து போனேன். நான் அறிமுகமான முதல் படமான ’அபூர்வ ராகங்கள்’ படத்தில் கூட இப்படி ஆனது இல்லை. அவரோடு சேர்ந்து ஆட ரொம்ப சிரமப்பட்டேன். அவருக்கு இணையாக என் தோற்றத்தை மாற்ற மேக்கப் மேன் காஸ்ட்யூம் நிபுணர்கள் உள்ளிட்ட தொழில் நுட்ப குழுவினர் மிகவும் சிரமப்பட்டனர்.



அறுபது வயதைக் கடந்த என்னை இப்படி டூயட் பாட வைத்தது கடவுள் எனக்கு கொடுத்த மிகப் பெரிய தண்டனை. ஓடும் ரயிலில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன. அதையெல்லாம் விட  சோனாக்ஷியுடன் டூயட் பாடுவது  சிரமமாக இருந்தது.

இவ்வளவுக்கும் நடுவில் திட்டமிட்டபடி படத்தை முடித்த கே.எஸ்.ரவிகுமாரை பாராட்டுகிறேன். ஹாலிவுட்டிலும் இது போன்ற பிரமாண்ட படங்கள்  நிறைய வருகின்றன. அவற்றை முடிக்க நிறைய  காலம் எடுக்கிறார்கள்.

தெலுங்கில் தயாராகும் படத்தை அவற்றோடு ஒப்பிடக் கூடாது. அது வேறு மாதிரி கதை. அப்படத்தை இயக்கும் ராஜாமௌலி சிறந்த டைரக்டர். அவர் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்" என்றார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

[X] Close