Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாண்டிச்சேரியில் குறும்படப் பயிற்சிப் பட்டறை!

நிழல் -பதியம் இணைந்து தமிழகத்தின் 32 மாவட்டங்களில் குறும்படப் பயிற்சிப் பட்டறையை நடத்தி உள்ளது. இதன் மூலம் கிராமப்புற இளைஞர்கள் 4500 பேர் பயனடைந்துள்ளனர் .

குறும்படப் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டவர்கள் இன்று திரைப்படம் ,தொலைக்காட்சி , பத்திரிகை இதழ்களில் பணியாற்றி வருகின்றனர் . இம்முறை நிழல், நண்பர்கள் தோட்டத்துடன் இணைந்து 37வது குறும்படப் பயிற்சிப் பட்டறையை டிசம்பர் மாதம் 26முதல் 31வரை சிங்கப்பூர் கல்யாண மண்டபம் ,மகாத்மா காந்தி சாலை,பாண்டிச்சேரியில் நடத்த உள்ளது.

கல்லூரிகளில் மட்டுமே கற்றுத் தரப்படும் திரைப்படக்கல்வியை கிராமப்புற மாணவர்கள் பெற வேண்டும் என்கிற குறிக்கோளோடு கேமரா ,திரைக்கதை ,படத்தொகுப்பு ,புகைப்படம் ,ஒளியமைப்பு ,நடிப்பு ,ஒப்பனை முதலியவை தமிழிலே கற்றுத்தரப்படுகிறது .
 
இறுதி நாள் மாணவர்களே குறும்படம் எடுக்கப் பயிற்சி தருகின்றனர் .உணவு ,உறைவிடம் ,பயிற்சிக் கருவிகளுக்கு கட்டணம் உண்டு .பட்டறையில் 50குறும்பட ஆவணப்படங்களும் ,உலகப் புகழ் பெற்ற 4 திரைப்படங்களும் திரையிடப்படும் .
 
பயிற்சி பெற விரும்புவோர் முன் பதிவு செய்து கொள்ளவும் .
தொடர்புக்கு :
ப.திருநாவுக்கரசு ,
31/48ராணி அண்ணா நகர் ,
கே.கே,நகர் ,
சென்னை 78
செல்பேசி : 94444484868.
மின்னஞ்சல் : arasu nizhal @gmail .com
இணையதளம்: www .nizhal .in

எடிட்டர் சாய்ஸ்

[X] Close