Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரிலீஸ் லீவ் சூப்பர் ஸ்டாரே உருவாக்குவார் - தனுஷ் , பாலாஜி மோகன் லிங்கா டாக்!

வெள்ளிக்கிழமை ரஜினி பிறந்தநாள் மற்றும் ‘லிங்கா’ பட ரிலீஸ் என ரசிகர்கள் கொண்டாடத் தயாராகி வருகின்றனர்.

ட்விட்டரில் வித்தியாசமாக  என்ற வார்த்தை டிரெண்டாகும் அளவிற்கு பல ரசிகர்கள் லீவு எடுத்து வரும் நிலையில். தற்போது தனுஷ் மற்றும் பாலாஜி மோகன் ட்விட்டரில் ‘லிங்கா’ படத்திற்கு தாங்கள் தயாராகி வருவது குறித்து ட்விட் செய்துள்ளனர். 

’நாளை மறுநாள் ‘லிங்கா’ தினம். இன்று முதல் டிக்கெட் ரிசர்வேஷன் ஆரம்பம். எனது லீவ் லெட்டரை நான் பாலாஜி மோகனிடம் கொடுத்திருக்கிறேன்’ என தனுஷ் ட்வீட் செய்துள்ளார். பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் ‘மாரி’ படத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கு பதில் ட்வீட்டாக ‘   அவர் படத்தோட ரிலீஸுக்கு லீவோ , பண்டிகையோ தேவையில்லை. அவரே அவரது ரிலீஸ் விடுமுறையை உருவாக்கி விடுவார். சூப்பர் ஸ்டார் ரஜினி மாஸ்’ என பாலாஜி மோகன் ட்விட் செய்துள்ளார். 

எடிட்டர் சாய்ஸ்

[X] Close