Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எட்டு வருடம் கழித்து கொக்கி குமார் - எமோஷனல் ஆன தனுஷ்!

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் , ப்ரியா ஆனந்த், டாப்ஸிநடிப்பில் உருவாகி வரும் படம் ‘வை ராஜா வை’. 

இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக இன்று நடைபெற்றது. இந்த படத்தில் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிப்பார் என ஏற்கனவே அறிவித்தது போல் படத்தின் டிரெய்லரில் தனுஷ் இடம் பிடித்தார். 

’ என் பேரு குமாரு , கொக்கி குமாரு , கேள்விப்பட்டுகிரியா’ என தெனாவெட்டாக தனுஷ் காரில் இறங்கி வந்து பேசும் டயலாக் இப்போது சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறது.

இந்நிலையில் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ எட்டு வருடம் கழித்து என்னை நான் மீண்டும் கொக்கி குமாராக பார்த்தேன். எமோஷனலாகி விட்டேன். யாராவது மீண்டும் கொக்கி குமாருக்கு தொடர்ச்சி உருவாக்குங்கள் ப்ளீஸ்’. என ட்விட் செய்துள்ளார். 

தனுஷ் நடித்த கதாபாத்திரங்களில் ‘புதுப்பேட்டை’ கொக்கி குமார் பாத்திரம் குறிப்பிடத்தக்கது. தனுஷே இந்த பாத்திரத்தை வடிவமைக்கும் படி கூறியதில் மீண்டும் அடுத்த கொக்கி குமார் அடிப்படையில் ஒரு படம் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close