Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கிராமத்துக் காதலை சொல்லும் 'காத்தாடி மனசு!'

J.V ஃபிலிம் மேக்கர்ஸ் மற்றும் KSD ஃபிலிம் மேக்கர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'காத்தாடி மனசு'. மௌரியா, விஜய் லோகேஷ், யுகா, தம்பி ராமையா, 'பருத்திவீரன்' சுஜாதா, யுவராணி, கஞ்சா கருப்பு, பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் N.S.மாதவன். இவர் இதற்குமுன்பு 'மறவாதே கண்மணியே', 'கீழக்கரை கிச்சா' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
 
 
கிராமத்துக் காதலைக் கையிலெடுத்து மீண்டுமொரு படைப்பாக வரவிருக்கிறது 'காத்தாடி மனசு'. அண்ணன் தங்கை உறவை அதன் படிமம் மாறாமல் கொடுத்திருக்கிறார்கள்.
 
இப்படத்தில் அண்ணனாக தம்பி ராமையாவும், தங்கையாக 'பருத்திவீரன்' சுஜாதாவும் நடித்திருக்கிறார்கள். தம்பி ராமைய்யாவின் மகனுக்கும், சுஜாதாவின் மகளுக்கும் ஏற்படும் காதலை படத்தின் மையக்கருவாக வைத்தும், இந்தக் காதலை இரு வீட்டாரின் குடும்பத்தார்களும் பிரித்துவிடுகிறார்கள்.
 
இதனால் பாதிக்கப்பட்ட காதலர்கள் எவ்வாறு மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்பதை உணர்ச்சிமிகு காட்சிகளாக உருவாக்கியிருக்கிறார்கள்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close