Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

10 கோடி நிபந்தனையில் 'லிங்கா' ரிலீஸ்!

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி, சோனாக்‌ஷி சின்ஹா, சந்தானம் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘லிங்கா’. 

இப்படத்தின் கதை என்னுடையது என மதுரையை சேர்ந்த ரவிரத்தினம் வழக்கு தொடர்ந்தார். விசாரணையின் போது வழக்கு சிவில் தரப்பிற்கு உரியது என தள்ளுபடியானது. 

இந்நிலையில் ரவிரத்தினம் உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி மேல்முறையீடு செய்தார். 

வழக்கை விசாரித்த நீதிபதிகள் 10 கோடி நிபந்தனையுடன் படத்தை வெளியிடலாம். 5 கோடியை ரொக்கமாகவும், மீதி 5கோடியை வங்கி உத்தரவாதத்துடனும் செலுத்த வேண்டும் என தீர்ப்பளித்துள்ளனர். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்