Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரஜினிக்கு பிரபலங்களின் வாழ்த்துகள்!

ரஜினியின் பிறந்த நாள் தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ரஜினியின் சக போட்டியாகவும் நண்பனாகவும் இருக்கும் கமல் தனது வாழ்த்துகளை யூடியூப் வீடியோ மூலம் பகிர்ந்துள்ளார்.

இதே போல் சினிமா பிரபலங்கள் பலரும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரஜினிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் குனால் கபூர் ட்வீட் செய்த ஹேப்பி பர்த்டே என்ற ட்வீட்டுடன் ரஜினி அமிதாப்புடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை தனது பக்கத்தில் ரீட்வீட் செய்துள்ளார்.

தனுஷ் நேற்று இரவே ‘ ஹேப்பி பர்த்டே சூப்பர் ஸ்டார், இன்னும் சில மணி நேரங்கள் தான் உள்ளது ‘லிங்கா’ ரிலீஸ்க்கு. என்னால் தூங்க முடியவில்லை. மிக மெதுவான இரவு’ என ட்வீட் செய்துள்ளார்.

'ஹேப்பி பர்த்டே டு மை ஆல் டைம் ஃபேவரைட் ஹீரோ சூப்பர் ஸ்டார்' என ட்வீட் செய்துள்ளார் இயக்குநர் கே.வி.ஆனந்த். வெங்கட் பிரபு தனது 'ஹேப்பி பர்த்டே தலைவா',  ‘லிங்கா’ என ட்வீட் செய்துள்ளார்.. 

யுவன் ஷங்கர் ராஜாவும் ‘ஹேப்பி பர்த்டே தலைவா' என ட்வீட் செய்ததுடன் உலக ஸ்டைல் தினம் என குறிப்பிடுள்ளார். 

உதயநிதி ஸ்டாலின் ‘ஹேப்பி பர்த்டே டு ஒன்&ஒன்லி சூப்பர் ஸ்டார். சன் டிவியில் ’தளபதி’ . சில மணி நேரங்களில் ‘லிங்கா’  என ட்வீட் செய்ததுடன் படத்தை பார்த்துவிட்டு ’லிங்கா’ சூப்பர் ஷோ என ட்வீட் செய்துள்ளார். மேலும், தனது ரசிகர்களின் வாழ்த்துகளையும் தனது பக்கத்தில் ரீட்வீட் செய்துள்ளார்.

விக்ரம் பிரபு  ’ஹேப்பி பர்த்டே சூப்பர் ஸ்டார் என வணக்கம் வைக்கும் கை சிம்பளுடன் ட்வீட் செய்துள்ளார். அதே போல் அனிருத் ‘தான் குழந்தையாக இருக்கும் போது ரஜினி தூக்கி வைத்திருக்கும் புகைப்படத்துடன் ’ஹேப்பி பர்த்டே சூப்பர் ஸ்டார் . என்றுமே சிறந்த மனிதர் என ட்வீட் செய்துள்ளார்.

சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட நாட்கள் வாழ வாழ்த்துகள், ஹேப்பி பர்த்டே சூப்பர் ஸ்டார், இந்நாளை விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என ட்வீட் செய்துள்ளார்.

ஹன்சிகா தனது ட்விட்டர் பக்கத்தில் ஹேப்பி பர்த்டே சூப்பர் ஸ்டார் ரஜினி சார் என  தனது மகிழ்ச்சியை வெளிபடுத்தியதோடு , இந்த உன்னதர் நீண்ட நாட்கள் வாழ்க என ட்வீட் செய்துள்ளார்.

சோனாக்‌ஷி சின்ஹா ‘லிங்கா ஃபீவர் அதிகரித்துள்ளது. ‘ஹேப்பி பர்த்டே ரஜினி சார் என்னுடைய தமிழ் அறிமுகத்தை சிறப்பாக மாற்றியமைக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

ராய் லட்சுமி , ‘ நமது சூப்பர் ஸ்டாருக்கு ஹேப்பி பர்த்டே, என்ன ஒரு எளிமையான மனிதர். மிகப்பெரும் வெற்றிகள் கிடைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன், என ட்வீட் செய்துள்ளார். மேலும், திரைத்துரையைச் சார்ந்த பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்