Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினிக்கு பிரதமர் மோடி, கருணாநிதி பிறந்தநாள் வாழ்த்து!

ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை,  தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் வெகுவிமரிசையாக இன்று கொண்டாடி வருகின்றனர்.  கோயில்களில் அர்ச்சனை மற்றும் நேர்த்திக்கடன் செலுத்துவதில் ஈடுபட்டு உள்ளனர். இலவச உடைகள், இலவச கல்வி உபகரணங்கள், இலவச மருத்துவ உதவிகள், ரத்த தானம், கண் தானம், உடல் உறுப்பு தானம், நிதியுதவி என ரசிகர்கள் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரை உலக பிரபலங்கள் தொலைபேசி மற்றும் சமூக வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி டிவிட்டர் மூலம் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், உங்களுடைய பிறந்தநாளில் நீண்ட ஆயுளுடனும், நலமுடனும் வாழ வாழ்த்துக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியும் ரஜினிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தொலைபேசி வாயிலாகத் தெரிவித்துள்ளார்.அதனை தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.



காங்கிரஸ் தலைவர்கள் ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஜி.கே. வாசன் போன்றோர் தங்கள் வாழ்த்துகளை ரஜினிக்கு தெரிவித்துள்ளனர். 

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சமூக வலைத் தளங்களில் தானும் ரஜினியும் உள்ள படங்களை வெளியிட்டு, இந்திய சினிமாவின் போக்கையே மாற்றிய சாதனையாளர் ரஜினிக்கு வாழ்த்துகள் என கூறியுள்ளார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close