Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆஸ்கர் லிஸ்ட்டில் கோச்சடையான் - மூன்று நாமினேஷன்களில் ஏ.ஆர்.ரஹ்மான்!

'கோச்சடையான்' படத்தில் சிறந்த இசை அமைப்புக்காக ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

87வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா பிப்ரவரி 20ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சஸ்லில் நடக்க உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ பெயர் பட்டியல் ஜனவரி 15ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதில் சிறந்த இசை அமைப்பிற்காக 114 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அதில் ஒன்று ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிப்பில் மோஷன் கேப்சர் அனிமேஷனில் வெளியான ‘கோச்சடையான்’ படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் பெயரும் பட்டியலில் இணைந்துள்ளது.

‘கோச்சடையான்’ தவிர்த்து ’தி 100 ஃபூட் ஜார்னி’, மற்றும் ’மில்லியன் டாலர் ஆர்ம்’ உள்ளிட்ட படங்களும் சிறந்த இசையமைப்புக்காக ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை இந்த விருதில் ‘கோச்சடையான்’ படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தால் தமிழுக்கு கிடைக்கும் முதல் ஆஸ்கார் விருதாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்த தகவல்கள் http://www.oscars.org/news/114-original-scores-2014-oscar-race அதிகாரப்பூர்வ ஆஸ்கார் இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close