Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சுதீப்புக்கு நன்றி சொன்ன ரஜினி!

’நான் ஈ’ மூலம் தமிழ் ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்ற சுதீப், கன்னடத்தில் முன்னணிநடிகர். இப்போது ‘விஜய் 58’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். 

முன்பு, கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் தான் ஒரு படத்தில் நடிப்பதற்காக கால்ஷீட் கொடுத்திருந்தார். அந்த தருணத்தில்,  ‘லிங்கா’ கதைக்கு ரஜினியும் ஓகே சொல்லிவிட , சுதீப் நடிக்க வேண்டிய படம் தள்ளிப்போடப்பட்டு ‘லிங்கா’ படம் ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ‘லிங்கா’ டைட்டில் கார்டில் சுதீப்புக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கே.எஸ்.ரவிகுமார் ‘லிங்கா’ இசை வெளியீட்டு விழாவிலும்  தனது நன்றியை தெரிவித்தார். 

தற்போது ரஜினியும் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுதீப் தனது ட்விட்டர் பக்கத்தில்  பகிர்ந்துள்ளார். 

'' நேற்று எனக்கு மிக சர்ப்ரைஸாக இருந்தது. தெரியாத ஒரு எண்ணிலிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அது சூப்பர் ஸ்டார். உண்மையில்  அது நல்ல தருணம் எனக்கு''  என ட்வீட் செய்துள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close