Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜயகாந்த் மகனுக்காக சிம்பு, ஆண்ட்ரியா, ரம்யா நம்பீசன் பாடிய குத்துப்பாடல்!

சுரேந்திரன் இயக்கத்தில் விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் , புதுமுக நாயகிகள் நேகா ஹிங், மற்றும் சுப்ரா ஐயப்பா நடிக்கும் படம் ‘சகாப்தம்’. 

இப்படத்தில் சிங்கம்புலிஜெகன், பவர் ஸ்டார் சீனிவாசன்தேவயானிரஞ்சித்ராஜேந்திரநாத்சண்முகராஜன், ’பன்னீர் புஷ்பங்கள்’ சுரேஷ், ’தலைவாசல்’ விஜய் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

வில்லனாக சௌரவ் எனும் மும்பை நடிகர் தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்திற்காக 1 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்ட செட்டில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளது. 

இந்தப் பாடலை சிம்பு, ஆண்ட்ரியா,  ரம்யா நம்பீசன் ஆகிய மூவரும் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடலில் கதாநாயகன் சண்முகப் பாண்டியன் மற்றும் இரண்டு கதாநாயகிகள் நேஹா ஹிங் மற்றும் சுப்ரா ஐயப்பா நடனமாட உள்ளனர்.

மிகவும் பிரபலமான நடன இயக்குநரைக் கொண்டு இப்பாடலுக்கு நடனம் அமைக்க உள்ளனர். 'சகாப்தம்' படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close