Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நல்லா ஏமாந்தீங்களா? - தமன்னாவின் குறும்பு செல்ஃபி !

என்னது... ஹாரி பாட்டர் டேனியல் ரேட்கிளிஃப்புடன் நம்ம மில்க்கி பியூட்டி தமன்னாவா? இப்படித்தான் ட்விட்டரில் பலரும் தமன்னாவைக் கேட்டு வருகின்றனர்.

தமன்னாவுக்கும் முதலில் ஆச்சரியமாகத்தான் இருந்ததாம்! ‘பாகுபலி’ ஷூட்டிங்கிற்காக பல்கேரியில் தமன்னா தங்கியிருந்த ஹோட்டலுக்கு அடுத்த அறையில் ‘ஹாரிபாட்டர்’ புகழ் டேனியல் ரேட்கிளிஃப் தங்கியிருக்கிறார் என்று யாரோ வத்தி வைக்க, அரக்கப் பறக்க டேனியல் ரேட்கிளிஃப்பை சந்தித்தார் தமன்னா என்று சொல்லப்பட்டது.



ஆனால், அப்புறம்தான் தெரிந்தது - அவர் ஹாரிபாட்டர் இல்லை; அவர்போல உருவ ஒற்றுமை கொண்ட ஒரு லண்டன்வாசி.

‘‘அவரைப் பார்த்ததும் முதலில் நானும் நம்பிட்டேன். அப்புறமாதான் தெரிஞ்சது... அவர் டேனியல் இல்லை. ஆனா, அச்சு அசல் அவர் மாதிரியே இருந்தார். நான் பிரமிப்பாயிட்டேன்!

என்னோட ஸ்பெக்ட்ஸைக் கழட்டி அவரைப் போட்டுக்கச் சொல்லி ஒரு செல்ஃபி எடுத்து, என்னோட ட்விட்டர்ல போடலாம்னு முடிவு பண்னேன். ‘வாவ்... ஹாரி வித் தமன்னாவா!’னு எல்லோரும் ஆச்சரியப்பட்டு கமென்ட் போட ஆரம்பிச்சிட்டாங்க!

எல்லாரும் நல்லா ஏமாந்தீங்களா?!’’ என்று ட்விட்டரில் பழிப்புக் காட்டியிருக்கிறது ப்யூட்டி.

- தமிழ்

எடிட்டர் சாய்ஸ்

[X] Close