Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போகும் பாதை தூரமில்லை - பிசாசு படத்தின் பாடல் வரிகள்!

மிஷ்கின் இயக்கத்தில் நாகா, ப்ரயாகா நடிக்கும் படம் ‘பிசாசு’. காதல் மற்றும் பேய் படமாக வெளியாக உள்ள இப்படம் டிசம்பர் 19ம் தேதியான வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.இப்படத்தின் ஒரு பாடல் வீடியோ தற்போது வெளியிடப்படுள்ளது.

ஏரால் கொரெல்லி இசையில், தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய அப்பாடலை உத்ரா பாடியுள்ளார். அப்பாடல் வரிகள் இதோ:

போகும் பாதை தூரமில்லை
வாழும் வாழ்க்கை பாரமில்லை
சாய்ந்து தோள் கொடு
இறைவன் உந்தன் காலடியில்
இருள் விலகும் அகஒளியில்
அன்னம் பகிர்ந்திடு
அன்னம் பகிர்ந்திடு

I

nterlude – I

நதிபோகும் கூழாங்கல் பயணம் தடயமில்லை
வலிதாங்கும் சுமைதாங்கி மண்ணில் பாரமில்லை
ஒவ்வொரு அலையின் பின் இன்னொரு கடலுண்டு
நம் கண்ணீர் இனிக்கட்டுமே

Interlude - II

கருணை மார்பில் சுனை கொண்டவர் யார்
அன்னை பாலென்றாளே
அருளின் ஊற்றைக் கண்திறந்தவர் யார்
இறைவன் உயிரென்றாரே
பெரும் கை ஆசியிலும்
இரு கை ஓசையிலும்
புவி எங்கும் புன்னகை பூக்கட்டுமே

இப்படித் தமிழ் வார்த்தைகளுடன் இந்தப் பாடல் மனதைத் தொடுகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
[X] Close