Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சரத்குமாரை வாழ்த்திய ரஜினி!

'சண்டமாருதம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சரத்குமார் ரஜினி குறித்த சில சுவாரஸ்யங்களைப் பகிர்ந்துகொண்டார்.

நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு சரத்குமார் நடிக்கும் படம் 'சண்டமாருதம்'. இதில் சரத்குமார் ஹீரோ, வில்லன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அதில் ரஜினியுடனான சந்திப்பு குறித்து சரத்குமார் பேசினார்.

 

'' 'சண்டமாருதம்' டிரெய்லரை ரஜினியிடம் காட்டினேன்.  'மக்கள் வில்லன் கதாபாத்திரத்தை அதிகம் விரும்புகிறார்கள். அதுவும் ஹீரோ வில்லனா நடிச்ச அதுக்கு தனி மரியாதையும், கவனமும் இருக்கு. நீங்களும் அந்த மாதிரி நடிக்குறது சந்தோஷம். வாழ்த்துகள்'னு சொன்னார்''  என ரஜினி வாழ்த்தியதைக் குறிப்பிட்டுப் பேசினார் சரத்குமார்.

இதில் சரத்குமாருக்கு ஜோடியாக ஓவியா, மீரா நந்தன் ஆகிய இருவரும் நடிக்கின்றனர். ஏ.வெங்கடேஷ் இயக்கும் இப்படத்துக்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்கிறார். மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close