Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிறந்த நாளில் கடற்கரையைத் தூய்மை செய்த ஆதி!

வழக்கமாக நடிகர்கள், திரை நட்சத்திரங்கள் நண்பர்கள் புடைசூழ பிரமாண்ட கேக்வெட்டி கொண்டாடுவார்கள். சிலர் அனாதை இல்லங்கள்  செல்வார்கள். ஏதாவது உதவிகள் செய்வார்கள்.

ஆனால், ஆதி தன் பிறந்தநாளை கடற்கரை தெருவில் இறங்கி சுத்தம் செய்து தூய்மை இந்தியா இயக்கத்தைத் தொடங்கினார். அதுமட்டுமல்ல, கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் நடத்தினார்.

ஆதிக்கு 14--12--14 அன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடினார். தன் குழுவினர் மற்றும் ரசிகர்களுடன் ஆதி பெசன்ட் நகர் கடற்கரை சென்றார். அங்கு குவிந்து கிடந்த  குப்பைகள் முழுவதும் அகற்றி சுத்தம் செய்தார். இதில் எக்ஸனோரா அமைப்பையும் இணைத்துக் கொண்டார்.



'க்ளீன் அண்ட் க்ரீன் சென்னை' என்கிற பெயரில் இந்நிகழ்வை நடத்தினார். கடற்கரையைத் தூய்மைப் படுத்தியதுடன் மரக்கன்றுகளையும் ஓரங்களில் நட்டார்.

காலை நேரத்தில் இந்த தூய்மைப்பணி நடைபெற்றதால் ரசிகர்கள், அருகிலுள்ளவர்கள் மட்டுமல்ல நடைப் பயிற்சி சென்றவர்கள் கூட இதில் ஆர்வமாகப் பங்கேற்றனர். தூய்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே பிரதமர் மோடி 'தூய்மை இந்தியா' திட்டத்தை தொடங்கியுள்ளார். அந்தப் பயணத்தில் ஆதியும் இணைந்துள்ளார்.

இது பற்றி  ஆதி "இந்த தூய்மைப் பணியை மக்களிடம் சுத்தம் பற்றிய விழிப்புணர்வு வர வேண்டும் என்பதற்காக செய்தோம். என் பிறந்த நாளில் அதுவும் காலையிலேயே இப்படி தொடங்கியதில் எனக்குப் பெருமையாகவும் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. "என்கிறார்.

நடிகர் ஆதி கண்தான விழிப்புணர்வையும்  ஏற்படுத்தினார். ஏற்கெனவே ஆதி, தான் நடிக்கும் 'யாகா வாராயினும் நாகாக்க' படப்பிடிப்பின் போதே படக்குழுவினரில் பலரையும் கண்தானம் செய்ய சம்மதிக்க வைத்துள்ளார்.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close