Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெயிக்கப்போவது யாரு - நயன்தாராவா? ஹன்சிகாவா?

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகை யார் என்பதுதான் எப்போதும் இருந்துவரும் கேள்வி. அந்த வகையில் நயன்தாராவுக்கும், ஹன்சிகாவுக்கும்தான் பலத்த போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2014ம் ஆண்டில் நயன்தாரா நடிப்பில் 'இது கதிர்வேலன் காதல்'. 'நீ எங்கே என் அன்பே' ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆனது. ஹன்சிகா நடிப்பிலும் 'மான் கராத்தே', 'அரண்மனை' என இரண்டு படங்கள் ரிலீஸ் ஆனது.

ஆனால், நயன்தாரா, ஹன்சிகா நடிப்பில் அதிக படங்கள்  அடுத்த ஆண்டில்  ரிலீஸ் ஆக இருக்கின்றன.

உதயநிதியுடன் 'நண்பேன்டா', சிம்புவுடன் 'இது நம்ம ஆளு', 'ஜெயம்' ரவியுடன் 'தனி ஒருவன்', சூர்யாவுடன் 'மாஸ்', விஜய் சேதுபதியுடன் 'நானும் ரௌடிதான்', ஆரியுடன்  'நைட் ஷோ' என ஆறு தமிழ்ப் படங்களில் நடிக்கிறார். இந்த ஆறு படங்களும் 2015ல் ரிலீஸ் ஆக இருப்பதுதான் சிறப்பு.

ஹன்சிகாவுக்கு சிம்புவுடன் 'வாலு',  ஆர்யாவுடன் 'மீகாமன்', விஷாலுடன் 'ஆம்பள', சித்துவுடன் 'உயிரே உயிரே', 'ஜெயம் ரவியோடு 'ரோமியோ ஜூலியட்',  உதயநிதியுடன் 'இதயம் முரளி', விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படம் என ஏழு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதில் 'மீகாமன்' மட்டும் இந்த ஆண்டு டிசம்பர் 25ல் ரிலீஸ் ஆகிறது. மற்ற ஆறு படங்களும் 2015ல் ரிலீஸ் ஆகின்றன.

இதில் யார் ஜெயிக்கப்போகிறார்? தொடர்ந்து வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ளப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close